சி கே ராஜன் 9488471235
கடலூர் மாவட்ட செய்தியாளர்..
கடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.
கடலூரில் 2024ம் ஆண்டின், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 10.09.2024 முதல் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு முதல்,
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றது. அதன்படி இவ்வாண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
இதற்கான துவக்க விழா கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் 10.09.2024 முதல் நடைபெறுகிறது கோயில் பணியாற்றுவது முதல் நாளான நேற்று விழாற்கு ஆட்சித்தலைவர்சி.பி. ஆதித்யா செந்தில்குமார், தலைமையேற்றார். சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், மாநகர மேயர் சுந்தரிராஜா, மாநகர துணை மேயர் பா. தாமரைச்செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்செ. மகேஷ்குமார் வரவேற்புரை வழங்கினார். இறுதியில் மாவட்ட குத்துச்சண்டைப் பயிற்றுநர் H. சிவராஜ் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவிற்கு அரசியல் பிரமுகர்களும், பல்வேறுத் துறையைச் சார்ந்த உயர் அலுவலர்களும், விளையாட்டு சங்க பிரதிநிதிகளும், விளையாட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இப்போட்டிகள் 10.09.2024 முதல் 14.09.2024 முடிய பள்ளி மாணவ மாணவிகளுக்கும், 17.9.2024 முதல் 19.9.2024 முடிய கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், 20.9.2024 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கும், 21 மற்றும் 22.09.2024 தேதிகளில் அரசுப் பணியாளர்களுக்கும், 23 மற்றும் 24.9.2024 தேதிகளில் பொதுப்பிரிவினருக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் கலந்துகொள்ள பதிவுசெய்துள்ள பள்ளிகளில் பயில்பவர்கள் 12537 பேரும், கல்லுாரிகளில் பயில்பவர்கள் 6033 பேரும், மாற்றுத்திறனாளிகள் 788 பேரும், அரசுத்துறைகளில் பணிபுரிபவர்கள் 722பேரும், பொதுப் பிரிவில் 2002பேரும் மொத்தம் 22082 பேர் கலந்துகொள்வார்கள் 6T60T எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல்பரிசாக ரூ.3000/-ம்,
2ம் பரிசாக ரூ.2000/-ம், 3ம் பரிசாக ரூ. 1000/-ம் வழங்கப்படுகின்றது.
இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மற்றும் சிறப்பாக ஆடிய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வுசெய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச்செல்லப்படுவர். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். குழுப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன் முறையாக நான்காம் இடம் பெறுபவர்களுக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக பரிசு வழங்கப்பட உள்ளது.