மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் பாரதி நகரில் உள்ள பாரதியார் சிலைக்கு ராஜபாளையம் பகிர்வு அறக்கட்டளை சார்பிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ராஜபாளையம் கிளை சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். செல்வகுமார், சரவணன், ஹரிஹரகுமார், கனகராஜ், மைதிலி கல்யாணி,பால முருகன், ஆசிரியர் சுப்பையா,ஜோதி பாஸ்கர் மாரியப்பன், கிருஷ்ணன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.