சுதந்திரப் போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் 67வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் எம்பி தலைமையில் தேனி பழைய பேருந்து நிலையத்தில் அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ்.சரவணகுமார் தேனி நகரச் செயலாளர் நாராயண பாண்டியன் வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி மற்றும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்கள் மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக பகுதி திமுக நிர்வாகிகள் சார்பு அணியின் நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா அவர்களின் கணவர் திமுக பிரமுகர் சசி நன்றி கூறினார்