மதுரை இலக்கிய பேரவை சார்பாக மகாகவி பாரதியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேரவையின் தலைவர் சண்முக.
திருக்குமரன் தலைமை தாங்கிடவும் செயலாளர் போத்திராஜ் முன்னிலை வகித்தார். மள்ளர் சேனையின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் சோலை பழனிவேல் ராஜன், பாரதியாரின் உருவச் சிலைக்குமலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் பேரவையின் துணைத்தலைவர் சரவணன், பொருளாளர் ராம்நாத் பாபு மள்ளர்சேனை நகர் மாவட்ட செயலாளர் கிஷோர் பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் கவிஞர் வரதராஜன் கவிஞர் துரைப்பாண்டியன், சேதுபதி பள்ளி தாளாளர் பார்த்தசாரதி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.