திருவாரூர் மாவட்ட வெண்ணாற்றில் குறைந்த அளவு தண்ணீர். பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத அவல நிலை. சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நேரடி விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் மன வேதனை.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடப்பு ஆண்டில் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்காத காரணத்தினால் குருவை சாகுபடி என்பது முற்றிலுமாக பொய்த்து போனது அதனைத் தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தின் பிற பகுதி களான அரிச்சந்திரபுரம் அன்னுகுடி கொத்தூர் கிளியனூர் வடவேர்குடி ஆதிவிடங்கன் திட்டச்சேரி புள்ளமங்கலம் திருநெல்லி காவல் ராஜங்கட்டளை உள்ளிட்ட பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் விதை நெல் தெளித்து 15 நாட்கள் ஆன நிலையில் வெண்ணாற்றில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் அதிலிருந்து பிரியக்கூடிய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் நெல் பயிர்கள் கருகும் நிலைக்கு வந்துள்ளதாக விவசாயிகளின் குற்ற சாட்டாக உள்ளது
மேலும் இதுவரை ஒரு ஏக்கர் உழவு செய்வதற்கு ரூபாய் 3600 விதை நெல்லுக்கு 1600 ரூபாயும் செலவு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள் தனியாரிடமே அதிக அளவில் உள்ளதால் அவர்கள் அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் குறிப்பாக பொருளாதார அதிகம் உள்ள விவசாயிகள் மட்டும் ஆற்றில் இன்ஜின் வைத்து நேரடியாக வயல்களுக்கு தண்ணீர் பாச்சி வருகின்றனர் இதற்கு ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் கூடுதல் செலவு அவதால் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு அனைத்து வேளாண்மை விரிவாக்க மையத்திலும் தேவையான விதைகளை வழங்க வேண்டும் அதேபோல் மேலும் உழவு மானியம் வழங்க வேண்டும் குறிப்பாக வெண்ணாற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விட்டும் முறை வைக்காமல் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட பகுதி விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது