செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற தெள்ளார் ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பழ. சீனிவாசன் அவர்களுக்கு பாராட்டு விழா கல்வி மையம் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் இரா.அசோக் குமார் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி, தலைமை ஆசிரியர் க. வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வி.எல்.ராஜன், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், பட்டதாரி ஆசிரியர்கள் ம.ரகுபாரதி, இரா.அருள் ஜோதி, ப.சக்ரவர்த்தி, ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் கு. சதானந்தன், அ. ஷாகுல் அமீது, வழக்கறிஞர் மணி, வந்தை பிரேம், ஆசிரியர் இராம.ரவி, வந்தை குமரன், முதுகலை ஆசிரியர்கள் க. பூபாலன், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் நல்லாசிரியர் விருது பெற்ற பழ. சீனிவாசன் ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ. கேசவராஜ் நன்றி கூறினார்.