தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கூட்டம் தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மாவட்ட முதன்மை நீதிபதி கே. அறிவொளி தலைமை உரையாற்றி தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நீதியரசர் கே கவிதா ஆகியோர் இணைந்து தேசிய மக்கள் நீதிமன்றத்தை துவங்கி வைத்தனர் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பி சரவணன் அமர்வு நீதிபதி பி. கணேசன் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் மேலும் வழக்கறிஞர்கள் வி ஆனந்த சயானன் பி ரதிதேவி சி ஜெயம் ஆகிய வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர் பெரியகுளத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற கூடுதல்
மாவட்ட அமர்வு நீதிபதி எஸ் சமீனா மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ கண்ணன் நீதித்துறை நடுவர் கே கமலநாதன் வழக்கறிஞர் எஸ் சுந்தர்ராஜன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர் உத்தமபாளையத்தில் தேசிய மக்கள் மன்ற நீதிமன்றம் நீதிபதி எம். சிவாஜி செல்லையா மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் சி. ராஜேஷ்குமார் ஏ ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது வழக்கறிஞர் சி ராஜ்குமார் தலைமையில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் ஆண்டிபட்டியில் தேசிய மக்கள் நீதிமன்ற மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ் கபாலீஸ்வரன் தலைமையில் தலைமையில் நடைபெற்றது வழக்கறிஞர் கே பாலமுருகன் தலைமையில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் போடிநாயக்கனூரில் தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதி எம் சையது சுலைமான் உசேன் மற்றும் நீதித்துறை நடுவர் பி ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது வழக்கறிஞர் பி கணேசன் தலைமையில் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர் தேனி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்ற பிரச்சனைகள் சம்பந்தமாக தேனி உத்தமபாளையம் பெரியகுளம் ஆண்டிபட்டி போடிநாயக்கனூர் ஆகிய நீதிமன்ற எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் வரா கடன்களுக்கு நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1689 வழக்குகளில் 17 கோடியே 80 லட்சத்து 29 ஆயிரத்து 846 ரூபாய்களுக்கு தீர்வு காணப்பட்டு பைசல் செய்யப்பட்டது
