பி.பி.ஜி.கல்வி நிறுவனங்களின் 17 வது நிறுவனர் தின விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் புயான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்..
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி கல்வி நிறுவனங்களின் 17 வது நிறுவனர் தின விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது..
பி.பி.ஜி கல்வி குழுமத்தின் தலைவர் மருத்துவர் எல்.பி.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில்,
தாளாளர் சாந்தி தங்கவேலு முன்னிலை வகித்தார்..
மருத்துவர் ஸ்வேதா அசோக் குமார் விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார்..
விழாவில் சிறப்பு விருந்தினராக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் புயான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர்,
சிறிய கிராமத்தில் பிறந்த மருத்துவர் தங்கவேலு அவரது கல்வியால் உயர்ந்த முன்னேற்றத்தை தாம் உள்ளபடியே பாராட்டுவதாக கூறிய அவர்,நமக்கு சிறந்த கல்வியை தருபவர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்ட அவர்,மருத்துவர் தங்கவேலுவின் தந்தை சிறந்த தொலை நோக்கு பார்வையோடு அவருக்கு இந்த கல்வி பயிலும் வாய்ப்பை அளித்துள்ளதாக குறிப்பிட்டார்..
நீதி வழங்குவதில் உலகிலேயே சிறந்ததாக இந்திய அரசியல் சாசனம் இருப்பதாக பெருமிதம் தெரிவித்த அவர், நமது இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள அனைவரும் சமம் என்பதை இந்திய நீதித்துறை பின்பற்றுவதாக கூறினார்..
அதனால் தான் இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிகராக மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சமூக அங்கீகாரம் அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததை அவர் சுட்டி காட்டினார்..
தொடர்ந்து பேசிய அவர்,
இளம் தலைமுறை மாணவர்கள் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என கூறினார்..
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சிறந்த மாணவர்கள் மட்டும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன
விழாவில் கவுரவ அழைப்பாளர்களாக கே.எம்.சி.எச்.
மருத்துவமனையின் தலைவர் நல்லா பழனிசாமி, குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் ஆகியோர் கலந்து கொண்டனர்..
முன்னதாக, முக்கிய விருந்தினர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் பங்கேற்றனர்..
தொடர்ந்து
பிபிஜி கல்வி குழுமத்தின் சார்பாக மக்களின் பயன்பாட்டிற்கென ஆம்புலன்ஸ் வாகன சேவை துவங்கப்பட்டது..
நிகழ்ச்சியில் இறுதியாக
பிபிஜி கல்வி குழமத்தின் துணைத் தலைவர் அக்க்ஷய் தங்கவேல் நன்றியுரை வழங்கினார்