திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவரும், மேற்கு ஒன்றிய செயலாளருமாகிய குமாரமங்கலம் கே. சங்கர்,கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ.இளவரசன், நகர செயலாளர் சா.குணசேகரன்,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தி தேவராஜன், பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், மாவட்ட பிரதிநிதிகள் எஸ். மூர்த்தி, ஆர்.ஜி. பாலா, நகர அவைத் தலைவர் ஆர். ரத்தினகுமார், முன்னாள் நகர பொருளாளர் விசுவநாதன்,ஒன்றிய குழு உறுப்பினர் பிரபாகரன், மாநில தொழில் நுட்ப பிரிவு துணைத் தலைவர் ராஜராஜ சோழன், ஆலங்குடி துரைராஜ், வழக்கறிஞர் ராஜமோகன், சிறுபான்மை பிரிவு ஷாஜகான்,இளைஞர் பாப்பரை சங்கர் உட்பட. கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.