பெரியகுளம் அருகே கட்சியின் லட்சுமிபுரத்தில் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கக் கோரி ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் ஊராட்சி செயலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் வரும் செப்டம்பர் 27 சென்னையில் பெருந்திரள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர் இந்த கூட்டத்திற்கு பெரியகுளம் ஒன்றிய தலைவர் ஜெய பாண்டியன் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் பாலமுருகன் மாவட்டச் செயலாளர் சுருளி பொருளாளர் பன்னீர்செல்வம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் குமரேசன் மாநில இணை செயலாளர் சுந்தரபாண்டி செயற்குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது ரதவேல் மகளிர் அணி தலைவி திலகவதி உள்பட மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சி செயலாளர்கள் பல ர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமி ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பும் போராட்டமும் செப்டம்பர் 27 இல் தமிழக மாநில அளவில் சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு நடத்த ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது முடிவில் ஒன்றிய செயலாளர் கோபால் நன்றி கூறினார்