தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டி பஞ்சாயத்தில் உள்ள தெருவிற்கு ராமர் ஆசிரியர் தெரு என்ற பெயர் சூட்டப்பட்டது. இதனை அடுத்து புதிதாக சூட்டப்பட்ட ராமர் ஆசிரியர் தெரு என்ற புதிய பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் குருவம்மாள் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மாரியம்மாள் முன்னிலை வகித்தார்.
புதிய பெயர் பலகையை சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் திறந்து வைத்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் குருவையா , ஜெயக்குமார், விக்னேஸ்வரி, ஆசிரியர் ராமராஜ் குடும்பத்தினர் மற்றும் ஊர் நாட்டாமைகள், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.