கல்லணை ஆற்றில் குளிக்க சென்ற பொழுது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தந்தை ,மகள்.*
திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் ( 40 ) இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
மேலும் பத்தாளப்பேட்டையில் பெல் ஊழியர்களால் நடத்தப்படும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் உறுப்பினராக உள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு கிருத்திகா (13) இவர் பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். ஆஷிகா (6) இவர் பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று மதியம் தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு சுரேஷ் பத்தாளபேட்டை பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் இறங்கி குளிப்பதற்காக முயன்றுள்ளார்.
அப்பொழுது கிருத்திகா தண்ணீரில் இறங்காமல் கரையில் இருந்துள்ளார். ஆஷிகா தண்ணீரில் குளிப்பதற்காக இறங்கிய பொழுது தண்ணீர் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக சுரேஷ் தண்ணீரில் இறங்கியுள்ளார். இதில் சுரேஷும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனை பார்த்து சற்றும் எதிர்பாராத கிருத்திகா தனது தந்தையும்
தங்கையும் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை பார்த்து கூச்சலிட்டுள்ளார்.
அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து ஆஷிகா மீட்டு உடனடியாக பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பறிசோதித்த மருத்துவர்கள் ஆஷிகா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சுரேஷ் உடலை அப்பகுதி மக்கள் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆஷிக்காவின் உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதோடு சுரேஷின் உடலை மீட்பதற்கு உரிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது