மதுரை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்
கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
50க்கும் மேற்பட்ட அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப் படுத்திட வேண்டும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், எம்.ஆர். பி. செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை இலட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.
அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.

கருணை அடிப்படையிலான பணியிடங்கள் 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை கைவிட்டு எற்கனவே வழங்கப்பட்டு வந்த 25 சதவீதம் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். சத்துணவு துறையில் பணிபுரியும் ஊழியரகள் மறைவிற்கு பின் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் சத்துணவு ஊழியர்களின் ஆண் வாரிசுக்கு பணி வழங்க மறுக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும்.
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணிப்பளுவினை குறைக்க வேண்டும். அலுவலக பணி நேரத்திற்கு பின்பும் அரசு விடுமுறை நாட்களிலும் நடத்தப்பட்டு வரும் ஆய்வுக் கூட்டங்களை தவிர்க்க வேண்டும்.

முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச்செயலாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் – மதுரை மாவட்டம்மாவட்டத்தலைவர்ஜெ.மூர்த்தி தலைமை தாங்கி பேசினார்.

மாவட்டச்செயலாளர்க.நீதிராஜா கோரிக்கை விளக்கவுரை யாற்றினார். பொதுச்செயலாளர்ஆ.செல்வம் சிறப்புரை யாற்றினார். மாவட்டப் பொருளாளர் சந்திரபோஸ் மாவட்டத்துணைத் தலைவர்கள் பெ.சந்திரபாண்டி மனோகரன்,மாவட்ட இணைச்செயலாளர் பரமசிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மதுரை மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை அரசு ராஜாஜி மருத்துவமனை மதுரை மருத்துவக் கல்லூரி, நெடுஞ் சாலைத்துறை அலுவலகம் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள் வேளாண்மை துறை அலுவலகங்கள் மாவட்ட கருவூலம் சார்நிலை கருவூலங்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *