திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே வல்லவன் கேட்டை கிராமத்தில் தங்கசாமி நினைவு நாளில் காவேரி கூக்குரல் சார்பில் அங்குள்ள விவசாய நிலங்களில் மரகன்றுகள் நடுவு பணி நடைப்பெற்றது.

அப்பகுதியில் உள்ள சிறப்பு அழைப்பாளராக தொழில் அதிபர் ராஜசேகர் கலந்து கொண்டு
மரகன்றுகள் நடுவு பணியினை தொடங்கி வைத்தார்

இவ்விழாவினை ஈஷா வின் மானூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் வில்லியம் ஜேம்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்

பின்பு செய்தியாளர்களிடம் கூறும் போது :-

புதுக்கோட்டை மாவட்டத்தில் மரங்கள் வளர்ப்பதின் முன்மாதிரியாக திகழ்ந்தவர் மரம் தங்கசாமி “வாழ்வோம் மரங்களுடன்” என்ற தாரக மந்திரத்துடன் டிம்பர் மர சாகுபடியை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தியவர். மரம் சார்ந்த விவசாயம் என்பது காலத்தின்
கட்டாயம் என விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி மாவட்டத்தையே ஒரு பசுஞ்சோலை யாக மாற்றியவர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக அவரது நினைவு நாளில், தமிழகத்தில் 37 மாவட்டங்களில், 86 விவசாய நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, 691 ஏக்கரில் மொத்தம் 1,67,828 மரக்கன்றுகள் நடப்படுகிறது.

மரம் தங்கசாமியின் கனவை நிறைவேற்றும் வகையில் மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயி களுக்கு பக்கபலமாக காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. ஈஷா சார்பாக இதுவரை விவசாயிகளுக்கு 11 கோடி மரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 1.12 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது, இந்த ஆண்டு தமிழகத்தில் 1.21 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 47.35 லட்சம் மரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற விலைமதிப்பு மிக்க டிம்பர் மரங்களை விவசாய நிலங்களில் நட்டு வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.

மேலும் விவசாயிகளுக்கு உணவுக்காடு வளர்ப்பு, பழங்கள் மதிப்புக்கூட்டுதல், மசாலா மற்றும் நறுமணப்பயிர் சாகுபடி குறித்த பல்வேறு பயிற்சிகளை நடத்திவருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தொழில்நுட்ப அறிவையும், வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகளையும் கற்றுக் கொள்கின்றனர்.

வரும் டிசம்பர் 22 அன்று “மரங்களுக்கு இடையே விவசாயம்! மகத்தான வருமானம்!”
என்ற சிறப்பு கருத்தரங்கத்தை காவேரி கூக்குரல் ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *