திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் கொடைரோடு பகுதிகளில் ஆய்வு செய்தபோது மதுரையிலிருந்து பெங்களூரு செல்வதற்காக 25 பயணிகளுடன் வந்த ஆம்னி பேருந்தை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்டது தெரிந்தது. இதை தொடர்ந்து பஸ்சை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து அதிக ஒலி,ஒளி அனுமதியின்றி இயக்கம், சாலை விதிகளை மதிக்காமல் சென்ற 10 வாகனங்களுக்கு ரூ.75 ஆயிரம் விதித்தனர்.