தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில்
நல்லூர் ஜெயராஜ் அன்னப்பாக்கியம் கல்லூரி , மற்றும் ஆலங்குளம் காவல் துறை சார்பில்
போதை விழிப்புணர்வு பேரணி நடைப் பெற்றது.
கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஜேசு ஜெகன், தலைமை தாங்கினார் அரசு வழங்கறிஞர் ஆலடி மானா, வழங்கறிஞர் சங்க நிர்வாகிகள் எஸ் பி டி நெல்சன் , சாந்த குமார், பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் வில்சன் வரவேற்று பேசினார்.
ஆலங்குளம் காவல் ஆய்வாளர் காசிப்பாண்டி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்து சிறப்புரை வழங்கினார்.
கல்லூரி பயிலும் இராண்டாம் ஆண்டு பயிலும் மாணவிகள் ஜெனிபா,உதய சங்கரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் இப்பேரணி
ஆலங்குளம் காவல் நிலையம் முன்பு புறப்பட்டு ஆலங்குளம் பேருந்து நிலையம் வந்தடைந்தது
பின்பு பொது மக்களுக்கு போதை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரணி முடிவில் நாட்டு நல பணி திட்ட அலுவலர் ஜோகன்னா நன்றியுரை வழங்கினார்
இப் பேரணிக்கான ஏற்பாடுகளை நட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெய டேவிட்சன் இமானு வேல், வில்சன் ஏவர்ட் ஆகியோர் தலைமையில் செய்திருந்தனர்.