R. கல்யாண முருகன்.செய்தியாளர் விருத்தாச்சலம்
விருத்தாச்சலம் அருகே மது போதையில் வீட்டிற்குள் புகுந்த நான்கு இளைஞர்கள், வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும், இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி, ஏழு சவரன் தங்க நகை, 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் – விஜயா தம்பதியினர் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு தூங்கும் போது, முன்பக்க கதவினை பூட்டிவிட்டு, வீட்டிற்குள் படுத்து தூங்கி உள்ளனர்.
அப்போது நள்ளிரவில் மது போதையில் வந்த நான்கு இளைஞர்கள், வீட்டின் முன் பக்க கதவில் பூட்ட பட்டிருந்த பூட்டினையும், ஜன்னல் கதவுகளையும் செங்கற்களால் அடித்து உடைத்துள்ளனர்.
இதனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் பயந்து, பின்பக்க வழியாக தப்பித்து ஓடிய நிலையில், வீட்டிற்குள் புகுந்த நான்கு நபர்கள், படுக்கையறைகள், சமையலறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் புகுந்து, அனைத்து பொருள்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர்.
இதனால் பயந்து போன கோவிந்தராஜ் மற்றும் சங்கீதா தம்பதியினர் 100 மூலம் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விருதாச்சலம் காவல்துறையினர் வருவதைக் கண்டு, நான்கு நபர்களும் அங்கிருந்து தப்பித்து ஓடிள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகையில், கடந்த விநாயகர் சதுர்த்தி நாளன்று, ஏற்பட்ட பிரச்சனையை காரணமாக கொண்டு, தாக்குதல் நடத்தியதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, இரு தரப்பினரும் சமாதானம் ஆன பின்பு, இது போல் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், கண்ணன், ஜெயராமன், முருகன் மற்றும் மணி ஆகிய நான்கு நபர்கள் தான் வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்து, நகை பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.