ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சௌந்தரி (65). டிபன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் கடையில் வியாபாரம் செய்தபோது இட்லி வாங்க வருபதுபோல் வந்த இளைஞர் திடீரென கழுத்தில் கிடந்த 2.5 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த செளந்திரி கூச்சலிட்டு ம ர்ம நபரை.
பின் தொடர்ந்தும் ஏதும் பயனில்லை. இது குறித்து சேத்தூர் காவல் நிலையத்தில் சௌந்தரி புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து செயின் பறித்துச்சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.