ராஜபாளையம்
எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் விருதுநகர் மண்டல கல்லூரிகளின் இணை ஆசிரியர் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , சாத்தூர் , கௌரவ விரிவுரையாளார் டாக்டர் எம். சரவணன் "பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெறுவதற்கு கணிதத்தின் பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினார் . பல்வேறு கல்லூரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன.
கல்லூரி தாளாளர் திரு. எ .கே.டி. கிருஷ்ணமராஜு அவர்கள் தலைமை தாங்கினார் . கல்லூரி முதல்வர் டாக்டர் S. ஜமுனா மற்றும் கல்வி ஆலோசகர் திரு.G.சங்கரநாராயணன் வாழ்த்துரை வழங்கினார்கள். கணிதத்துறைத் தலைவி திருமதி P. மீனாட்சி அவர்கள் அறிமுக உரையாற்றினார். உதவி பேராசிரியர் திருமதி B. ஜெகதீஸ்வரி வரவேற்புரையாற்றினார். மாணவி கௌசல்யா நன்றியுரையாற்றினார்.