செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை மூல மூர்த்திகளுக்கு விஷேச திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு மலர் மாலைகள் சாற்றப்பட்டு, நெய்வேத்யம் நடைபெற்றது. பிறகு மேள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தேறியது.
பிறகு மாலை நடைபெற்ற நிகழ்வில் ஆண்டாள், கண்ணன் பாடல்களுக்கு இளம் மழலையரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை அர்ச்சகர் ராஜன் ஸ்வாமிகள் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.