கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் “கரிஷ்மா” கலைத்திறன் போட்டியில் பிக் பாஸ் புகழ் மணிச்சந்திரா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ,மாணவிகளின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில் கரிஷ்மா எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது…

இதன் ஒரு பகுதியாக கரிஷ்மா 2024 கலை நிகழ்ச்சி போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பி.எஸ்.ஜி.ர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியின் செயலர் யசோதா தேவி தலைமையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் பிரபல பாடகர் ஆதித்யா கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்..

இதில், கோவை,ஈரோடு,திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 60 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 800 மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…

கரிஷ்மா நிகழ்வாக நடைபெற்ற இதில், ஓவியம்,புகைப்படம் எடுத்தல், பட கவிதை விளம்பரப் படப்பிடிப்பு வினாடி வினா, குழு மற்றும் தனி நடனம், இசைக்குழுக்களுக்கான போட்டி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன…

இதில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த் மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஹாரத்தி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பிரபல நடனக்கலைஞர் பிக் பாஸ் புகழ் மணிச்சந்திரா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

இதில் திருச்சியை சேர்ந்த ஈபர் கல்லூரி மாணவர் “கரிஷ்மா” பட்டம் வென்றார்.. வழங்கப்பட்டது…

தொடர்ந்து மணிச்சந்தி்ரா கல்லூரி மாணவிகளிடன் இணைந்து வேட்டையன் பட பாடலான மனசிலாயோ பாட்டுக்கு நடனமாடி அசத்தினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *