கர்ணனை காப்பாற்றாத கண்ணன் குற்றவாளி வழக்காடு மன்றம்.
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸல பெருமாள் திருகோயில் 108 திவ்ய தேசங்களில் 16 வது ஸ்தலமாகும். புரட்டாசி முதல் சனிக்கிழமையான (21/09/2024) காலை முதல் ஆயிரம் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் மேற்கொண்டனர்.
மாலை திருவாரூர் ஸ்ரீ பக்தவத்ஸல பக்தர்கள் குழு சார்பில்”கர்ணனை காப்பாற்றாத கண்ணன் குற்றவாளி என்ற தலைப்பில் நடைபெற்ற வழக்காடு மன்றத்தை பக்தர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்
திருவாரூர் ராஜ் (எ) கருணாநிதி அவர்கள் வரவேற்று பேசினார்.
திருக்கோயில் செயல் அலுவலர் K.ராஜ்குமார் அவர்கள் முன்னிலையில் திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் வாரை.எஸ். பிரகாஷ் அவர்கள் வழக்காடு மன்றத்தை துவங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
தமிழியல் ஆய்வாளர் முனைவர். இரா.அறிவழகன் அவர்கள் நடுவராகவும், ஆன்மீக சொற்பொழிவாளர் அ.பெ.தினேஷ் அவர்கள் வழக்கு தொடுத்தும்,
பட்டிமன்ற பேச்சாளர் இரா.செ. முத்துக்குமார் அவர்கள் வழக்கை மறுத்தும் வழக்காடு மன்றம் நடைபெற்றது
இருதரப்பு வாதங்களுக்கு பின்னர் நிறைவில்
கர்ணனை காப்பாற்றாத கண்ணன் மீது குற்றமில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது இனிய நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர் ரஜினிசின்னா வழக்கறிஞர்கள் கார்த்திகேயன் சசிகுமார் கணேசன் திருவாரூர் ஸ்ரீ பக்தவத்ஸல பெருமாள் பக்தர்கள் குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்