தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நகராட்சி,பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் உள்ள நிரந்தர ,ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்,தூய்மை காவலர்கள்,டெங்கு, மலேரியா, மஸ்தூர் பணியாளர்கள்,துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய குடியரசு தொழிலாளர்கள் தொழிற்சங்கம் மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்,
தேனி மாவட்ட செயலாளர் மணிகண்டன்,மாவட்ட பொருளாளர் முருகன்,துணைச் செயலாளர் வேல்முருகன்,துணைத் தலைவர் பிச்சையம்மாள், பிச்சைமுத்து, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில துணைச் செயலாளர் ஜெகநாதன் துவக்கவுரையாற்றினார்.
முன்னாள் மாநில பொதுச் செயலாளர் தன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்.மாநிலத் தலைவர் அன்பு வேந்தன் சிறப்புரை ஆற்றினார். அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் நிலையான ஊதியத்தை வழங்கக்கோரியும், துப்புரவு பணியாளர்களுக்கு மானியத்துடன்கூடிய கடனை தாட்கோ நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும்,அனைத்து தொழிலாளர்களுக்கும் அலுவலகத்தில் கழிவறைகளுடன் கூடிய ஓய்வு அறை அமைத்துக் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மாநாட்டின் வாயிலாக கோரிக்கைகள் வைத்தனர்.