தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு ஊர்வலம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் தூய்மையே சேவை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலம் போடி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி நகரின் பிரதான சாலைகளான கட்டபொம்மன் சிலை தேவர் சிலை பஸ் ஸ்டாண்ட் தேனி ரோடு குரங்கனி ரோடு தேவாரம் ரோடு ஆகிய பகுதிகளில் ஊர்வலமாக வந்து மீண்டும் நகராட்சி அலுவலகம் முன் நிறைவடைந்தது ஊர்வலத்தில் நகரை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் . நகரில் உள்ள 33 வார்டுகளிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளை வாங்க வரும் துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்கி மக்கள் சுகாதாரமாக வாழ நகராட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என ஊர்வலத்தில் கோஷங்கள் எழுப்பி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் இந்த ஊர்வலத்தில் நகராட்சி ஆணையாளர் கா. ராஜலட்சுமி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் ஊர்வல நிறைவில் நகராட்சி நகர் மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் நன்றி கூறினார்