தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் விளையாட்டு வலுதூக்கும் சங்கம் , டாக்டர் மதன் ஜிம் இணைந்து இன்று மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டியை நடத்தினர்.
தஞ்சை அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடந்த விழாவுக்கு மாவட்ட வலுதூக்கும் சங்கம் செயலாளர் பேச்சிமுத்து வரவேற்றார்.
போட்டியை வலு தூக்கும் சங்கம் மாவட்டத் தலைவர் வக்கீல் எஸ்.எஸ். ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக சேலம் ஓமலூர் கருப்புசாமி சேரிட்டி பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் செல்லதுரை, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தவமணி, நாஞ்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் தலைவர் ராமச்சந்திரன், மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன், மாநகராட்சி கவுன்சிலர் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர் .
போட்டியானது சப் – ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவுகளின் படி நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்று வலுதூக்கி தங்களது திறமைகளை வெளிகாட்டினர் . தொடர்ந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பின்னர் மாலையில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெறும்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் நவம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.