கடலூர்
புகையிலை இல்லா இளைஞர் சமுதாயம் 2.0 என்னும் புகையிலை திட்டத்தை வலியுறுத்தி ஏற்படுத்தப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
-புகையிலை தடுப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய தேசிய புகையிலை தடுப்பு மையத்தின் அறிவுறுத்தலின் பேரில் –
டவுன் ஹாலில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சி பி ஆதித்யா செந்தில்குமார் அவர்களால் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
உடன்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
இணை இயக்குநர்,மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர்கள்
பக்கேற்றனர். இப்பேரணியில் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்
இப் பேரணி டவுன் ஹாலில் தொடங்கி மாவட்ட அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது. பொதுமக்களுக்கு புகையிலை தடுப்பு வாசகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இறுதியில் மருத்துவர் அபிநயா நன்றி கூறினார்