தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஈச்சம்பாடி தென்பெண்ணையாற்றில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2024-25-ன் கீழ் ஆறுகளில் நாட்டின மீன்குஞ்சுகளை இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் மீன்வளத்தைப் பெருக்கிடும் நோக்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பாக 1.50 இலட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் அரூர் அதிமுக MLA வே.சம்பத்குமார், தருமபுரி மண்டல மீன்வளத் துணை இயக்குநர் .
சுப்பிரமணியன், தருமபுரி மீன்வள உதவி இயக்குநர் கோகுலரமணன், கம்பைநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் தனபால்,மற்றும் ஈச்சம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர், கம்பைநல்லூர் காவல் ஆய்வாளர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.