பக்கீல் ஓடை தூர் வாரும் பணி மேயர் ஜெகன் நேரில் ஆய்வு
தமிழக முதலமைச்சரின் உத்தரவுக்கணங்க மழை காலத்துக்கு முன்பு ஓடைகளில் தூர்வார மாநகராட்சி முடிவு செய்தது அதன்படி கருத்த பாலம் மற்றும் பக்கீல் ஓடையில் தூர் வாரும் பணி இன்று துவக்கப்பட்டது இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் சென்று ஆய்வு செய்தார் அப்போது நடைபெற்று வரும் பணிகளை அங்கிருந்த பணியாளர்களிடம் விபரங்களை கேட்டறிந்தார் விரைவாக பணிகளை முடிக்குமாறு மே யர் ஜெகன் கூறினார் உடன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மண்டல தலைவர் நிர்மல் ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்
