விருதுநகர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அனிதா தலைமையில் ராஜபாளையம் வட்ட வழங்கல் தனி வட்டாட்சியர் தனராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்ட வழங்கல் தனி வட்டாட்சியர் அப்பாதுரை, சிவகாசி வட்ட வழங்கல் தனி வட்டாட்சியர் கோதண்டராமன் ஆகியோர் கொண்ட குழுவினர் தளவாய் வரும் விலக்கு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அது சமயம் கேரளாவை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்ததை நிறுத்தி விசாரித்த போது உள்ளே
15.டன் கொண்ட 300 மூடை ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர் நகரை சேர்ந்த.லாரி டிரைவர். தங்கதுரை (50) என்பவரை பிடித்து விசாரித்த போது லாரி திருமங்கலத்தில் இருந்து கேரளாவிற்கு சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது இதுகுறித்து தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.