போடிநாயக்கனூர் நகராட்சி 20ஆவது வார்டு தெருக்கள் சுத்தம் செய்த தகவல்களை திறந்து வைத்த நகர் மன்ற தலைவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 20 ஆவது வார்டு பகுதியில் சுருளி லேஅவுட் வ உ சி நகர் தெற்கு தெரு வ உ சி நகர் 2வது தெரு ஆகிய தெருக்களை கிரீன் ஸ்ட்ரீட் கிளீன் ஸ்ட்ரீட் தெருக்களாக போடிநாயக்கனூர் நகராட்சியால் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அதை பொதுமக்களுக்கு பிரகடனப்படுத்தும் விதமாக பதாகைகளை நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் திறந்து வைத்தார்
உடன் நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் 20 வது நகர மன்ற உறுப்பினரும் தேனி வடக்கு மாவட்ட ஐடி பிரிவு செயலாளருமான மகேஸ்வரன் நகர மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் உள்பட நகராட்சி வார்டு பொதுமக்கள் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இருபதாவது வார்டு நகர மன்ற உறுப்பினரும் தேனி வடக்கு மாவட்ட ஐடி பிரிவு செயலாளருமான மகேஸ்வரன் நன்றி கூறினார்