தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா மேற்கண்ட திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் ரமேஷ் பாபு கண்காணிப்பாளர் கே எஸ் குமார் ஆகியோரிடம் பாராட்டு சான்றிதழை வழங்கி தங்களின் பொதுமக்களின் தன்னலமற்ற சேவை தொடர வேண்டும் என மனதார வாழ்த்தினார்.