தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையம் கடந்த 14/9/2024 அன்று குரூப்2,2a தேர்வினை நடத்தியது .சுமார்6 லட்சம் பேர் தேர்வை எதிர்கொண்டனர்.இதற்கான மெயின் தேர்வு பிப்ரவரி 2025 ல் நடத்தபடும் என TNPSC அறிவித்துள்ளது.. குரூப்2aபணிக்கு முதன்முறையாக மெயின் தேர்வு கணினி வழியில் நடத்த படவுள்ளது.
இதற்கான பாடத்திட்டத்தை TNPSC அதனுடைய இணையதளத்தில் வெளியிடுள்ளது..இரண்டு தாள்களை கொண்ட மெயின் தேர்வில் பொதுஅறிவு, தமிழ் பாடங்களின் வினாக்கள் அமையும்முறை மாணவர்களுக்கு ஓரளவு அறிவர்.ஆனால் 40 மதிப்பெண்களுக்கு புதிதாக நுண்ணறிவு பகுதியில் 40 மதிப்பெண்கள் கேட்க படும் என தேர்வாணையம் தெரித்துள்ள நிலையில் இந்த பாடத்துடன் சேர்த்து குரூப்2a மெயின்தேர்விக்கான மாதிரி வினாக்களை TNPSC அதனுடைய இணையதளத்தில் வெளியிட்டால் மெயின் தேர்வுக்கு இப்போதிருந்தே தயாராக வசதியாக இருக்கும் என தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்..
எனவே இதை பரிசீலனை செய்து TNPSC குரூப்2a தேர்வுக்கான மாதிரிவினாவை வெளியிட முன்வரவேண்டும் என ஆயக்குடி மரத்தடி மையம் சார்பில் வேண்டுகிறோம்..