தேசிய இரத்ததான நாளை முன்னிட்டு மதுரை தனியார் மருத்துவமனை நடத்திய விழாவில் வலங்கைமான் இராம வேல்முருகனுக்கு சிறந்த ஊக்குவிப்பாளர் விருது வழங்கப்பட்டது.
தேசிய இரத்ததான நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள பிரபலமான மருத்துவமனை இரத்ததான முகாம் நடத்திய கல்லூரிகளுக்கும் இரத்ததான முகாமை நடத்த ஊக்கப்படுத்திய நபர்களுக்கும் விருது வழங்கும் விழா நடத்தியது.
இதில் வலங்கைமான் அரசினர் பலவகைத் தொழில்நுட்பக்கல்லூரிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. வலங்கைமான்
அரசினர் பலவகைதொழில்நுட்பக் கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளரும் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளருமான கவிஞர் இராம வேல்முருகன் அவர்களுக்கு சிறந்த ஊக்குவிப்பாளர் best motivator award விருது வழங்கப்பட்டது.
இவ்விரு விருதுகளையும் நடிகரும் மிமிக்ரிகலைஞருமான ரோபோ சங்கர் வழங்கினார். விருது பெற்ற கவிஞரை கல்லூரி முதல்வரும் ஆசிரியர்களும் பாராட்டினர்.