செங்கோட்டையிலிருந்து செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு கடந்த 25 9 2024 ஆம் தேதி சென்றபோது கடையநல்லூர் பாம்பு கோயில் சந்தைக்கும் இடையே வரும் போது தண்டவாளத்திற்கு இடையே 10 கிலோ எடையுள்ள பெரிய கல் ஒன்று இருந்தது. இதில் மோதிய பொதிகை ரயில் கொஞ்ச தூரம் சென்று நின்றது . அதிர்ஷ்டவசமாக கல் நொறுங்கிய நிலையில் ரயிலுக்கு எந்த சேதமும் இல்லை இதனைத்தொடர்ந்து ரயிலை கவிழ்க்க சதியென குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் ரயில்வே எஸ்.பி.ராஜன் தலைமையில் நெல்லை டி.எஸ்.பி.இளங்கோவன் ஆய்வாளர் செல்வி உள்ளிட்ட குழுவினர் தனிப்படையினர் சம்பவம் நடந்த பகுதியில் செயல்பட்டுவரும்
கல்குவாரியில் பணியாற்றிய சத்தீஸ்கர்மாநிலத்தை சேர்ந்த புல்சிங் பாகேல்,பி.ஈஸ்வர் மீடியா ஆகிய 2 நபர்கள்தான் என்பதும் இவர்கள்ரீல்ஸ் மோகத்தில் இதனை செய்ததும் அவர்களது செல்போனில் ஏராளமான ரயில் தொடர்பான ரீல்ஸ்களை எடுத்துவைத்து இன்ஸ்டா கிராமில் பதிவிட்டதும் கண்டறியப்பட்டு 1ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டனர்.
