மதுரை மாவட்டத்தில் மின்னணு சாதனங்கள் விற்பதாக மோசடி: இருவர் கைது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் மின்னணு சாதனங்களை குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறி, இணையதளம் மூலம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் இணையதளம் மூலம் மின்னணு சாதனங்களை குறைந்த விலைக்கு விற்பதாக முகநூலில் விளம்பரம் வெளியானது. இதைப் பார்த்து பத்துக்கும் மேற்பட்டோர் ரூ ஒரு லட்சம் வரை செலுத்தினர்.
பணம் செலுத்தி பல நாட்களாகியும் மின்னணு சாதனங்கள் அனுப்பப்படாததால், விளம்பரம் செய்த நபர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை.
இதுகுறித்து மதுரை ஊரகக்காவல் துறை இணையக் குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் தனிப் படை அமைத்து, விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக தேனி மாவட்டம், எரசநாயக்கன்பட் டியைச் சேர்ந்த சாமிதாஸ் மகன் விஜய் (28), கோடங்கிபட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ராம் குமார் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து செல்போன் , சிம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.விரைவாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பாராட்டினார்.