திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கீழ பனையூர் ஊராட்சியில் ஓஎன்ஜிசி காவேரி அசட் சார்பில் சுமார் 45 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது நிகழ்விற்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே மாரிமுத்து தலைமை வகித்தார் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி பாலு என்ற பாலசுப்பிரமணியன் திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கர் காரைக்கால் ஓஎன்ஜிசி காவேரி அசட் ஈடி உதவி மேலாளர் உதய் பஸ்வான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் சமுதாய கூட புதிய கட்டிடத்தினை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார் நிகழ்வில் குழும பொது மேலாளர் பி என் மாறன் முதன்மை பொது மேலாளர்கள் இளங்கோவன் கொளஞ்சிநாதன் பொது மேலாளர்கள் பாலகணேஷ் பிரபாகர் ஒருங்கிணைப்பாளர்கள் கே ஆர் முருகானந்தம் கார்த்தி சுரேஷ் மனித வள முதன்மை பொது மேலாளர் எம் கணேசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கமலவதனம் செல்வராஜ் உள்பட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அலுவலர்கள் மக்கள் பிரதிநிதிகள் உடன் இருந்தனர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பரிந்துரையில் நாகப்பட்டினம் யோகிதா தொண்டு நிறுவனத்தினர் செயலாக்கம் செய்திருந்தனர் முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் கே தேன்மொழி குமார் வரவேற்றார் இறுதியாக ஒன்றியக் குழு உறுப்பினர் பிரேமா குணசேகரன் நன்றி கூறினார்