பி.வி.ஆர்.சினிமாஸ் ஐந்து பிரம்மாண்ட ஸ்கீரின்களுடன் வடவள்ளியில் அசத்தல் மல்டிபிளக்ஸ் துவக்கம்
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாகவும்,
இந்தியாவில் உள்ள நகரங்களில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோவை நகரின் கட்டமைப்புகள் வளர்ந்து வருகின்றன.
ஏற்கனவே தொழில் நகரம் என்ற பெயரை கொண்டுள்ள கோவை தற்போது ஐடி நிறுனவனங்கள்,வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை,சர்வதேச விமான நிலையம்,
மேம்பாலங்கள் என அடுத்த லெவலுக்கு கோவை தன்னை தயார் படுத்தி வருகிறது..
இந்நிலையில் இவற்றுக்கெல்லாம் நடுவே கோவை வாழ் மக்களை இன்னும் குஷி படுத்தும் விதமாக பி.வி.ஆர்.சினிமாஸ் பிஎன்புதூர் சீரநாயக்கன்பாளையம் பகுதியில் அல்வெல் மாலில் (Alveal Fun Savy Malll) துவங்கியுள்ளது…
கோவை நகரில் ஏற்கனவே புரூக் பீல்ட்ஸ் மற்றும் புரோசான் மால் தொடர்ந்து, பிவிஆர் சினிமாஸ் தனது ஐந்து ஸ்கீரின் மல்டிபிளக்ஸ் ஐ அல்வேல் மாலில் துவங்கியுள்ளனர்..
இது குறித்து பி.வி.ஆர்.ஐநாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் பிஜ்லி கூறுகையில்,
இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பிரீமியம் சினிமாஸ் நிறுவனமான பி.வி.ஆர்.ஐநாக்ஸ் கோவையில் மூன்றாவது இடத்தில் தமது திரையரங்கத்தை துவங்கி உள்ளதாக கூறிய அவர், 5 ஆடிட்டோரியங்களில் 894 இருக்கைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..,
இந்த புதிய புதிய பி.வி.ஆர். ஐநாக்ஸ் திரையரங்கம், ஆடம்பரமான திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,
நவீன மற்றும் சமீபத்திய சினிமா தொழில்நுட்பத்துடன் இந்த மல்டிபிளெக்ஸ்,அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்..
குறிப்பாக ஐந்து அரங்குகளிலும் நெக்ஸ்ட் ஜெனரல் 3டி சிஸ்டம், 2 கே நெக்ஸ்ட் ஜெனரல் ப்ரொஜெக்டர் தொழில்நுட்பம் மற்றும் டால்பி 7.1 சவுண்ட் சிஸ்டம் மற்றும் டிடிஎஸ் எக்ஸ் ஒலியைக் கொண்டுள்ளது, இது ஒரு இணையற்ற செவிப்புல அனுபவத்திற்காக சிறந்த ஒலி தரத்தை வழங்கும் என அவர் குறிப்பிட்டார்..