ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மேலூர் துரைசாமிபுரம் 13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு முப்புடாதி அம்மன் வடகாசி அம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் பூக்குழி திருவிழா
புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் அம்மனுக்கு பால் பன்னீர் தேன் இளநீர் போன்ற 16 வகை அபிஷேகம் மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது அதனை தொடர்ந்து சரியாக 5 மணி அளவில் கொடியேற்று விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
ஏராளமான பக்தர்கள் கொடியேற்று விழாவில் கலந்துகொண்டு அம்மன் தரிசனம் செய்தனர் ஒன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு 7 மணி அளவில் அம்மன் தண்டியில் செப்பரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது வெள்ளிக்கிழமை ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு காலை 9 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தீபா ஆராதனை வழிபாடு நடைபெற்று அதனைத் தொடர்ந்து பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாலை 6 மணி அளவில் முப்புடாதி அம்மன் தட்டு சப்பரத்தில் ராஜ மேளம் நையாண்டி மேளத்துடன் ஏராளமான காப்பு கட்டிய பக்தர்களுடன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது
அதன் பின் பக்தர்கள் பூ இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர் விழா ஏற்பாடுகளை சொக்கநாதன் புத்தூர் மேலூர் துரைச்சாமிபுரம் 13 சமுதாய நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்