ஆழ்துளை கிணறு மற்றும் பைப் லைன் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார் அதிமுக அரூர் எம்.எல்.ஏ சம்பத்குமார்,
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வகுரப்பம்பட்டி ஊராட்சி பட்டகப்பட்டி கிராமத்தில் குடிநீர் பிரச்சனை தீர்க்க மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொது நிதியிலிருந்து ரூபாய் 4.15 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து பைப் லைன் அமைக்கும் பணிக்கு அரூர் எம்.எல்.ஏ வே.சம்பத்குமார் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.கே.மகாலிங்கம்,மாவட்ட கவுன்சிலர் மற்றும் கம்பைநல்லூர் நகர செயலாளர் கே.கே.தனபால், ஒன்றிய அவைத்தலைவர் ராமஜெயம், வார்டு கவுண்சிலர் சரவணன், அதிமுக கட்சி நிர்வாகிகள் கணேசன்,வி.பி.சரவணன், முருகன் ,சபரி,கல்யாணசுந்தரம், தேவா,அறிவானந்தம்,பாபு,அருள்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.