தமிழ்நாடு அரசு பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள சிலுவைப்பட்டியில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ. 3.70 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட 56 குடியிருப்புகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
ரூ. 3.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 56 குடியிருப்புகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.