ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியான தளவாய்புரம் 8 வது வார்டு தெருக்களில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்து அடைப்புகளை அகற்றாத காரணத்தினால்.ஒரு சிறிய மழை பெய்ததற்கே கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில்.ஆறாக ஓடுகிறது இதனால் மிகுந்த துர் நாற்றம் நோய்தொற்று ஏற்படுகிறது.
குறிப்பாக குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள்.மக்கள் நலன் கருதி உள்ளாச்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நோய் தொற்று அபாயத்திலிருந்து தங்களை காக்க வேண்டும் என்கின்றனர்