கீழடியில்,திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி சமூகப்பணித்துறை சார்பில் நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு. கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் அரிமா. லயன் ரெத்தினம், கல்லூரி இயக்குனர் முனைவர் துரை ரெத்தினம் அவர்களின் ஆலோசனையின்படியும் கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் அவர்களின் வழிகாட்டலில், துறைத்தலைவர் ரெஜினா அனுமதியோடு கீழடியில் சமூகப்பணித்துறை சார்பில் நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சமூகப்பணித்துறை மாணவர்கள் பொது மக்களுக்கு மஞ்சப்பை வழங்கி நெகிழியை பயன்படுத்த வேண்டாம் மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்தி மண் வளம் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கீழடி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் உதவிப் பேராசிரியர்கள் முனைவர். ராஜா, முனைவர் கதிரவன் கீழடி பகுதியில் நெகிழி பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மஞ்சப்பை பயன்படுத்துவத்தின் நன்மைகள் குறித்தும் பேசியும் மாணவர்களை ஒருங்கிணைத்தும் சிறப்பித்தனர்.