மதுரை காமராஜர் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையே மகளிருக்கான கைப்பந்து போட்டி ராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் 16 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதி சுற்றுக்கு மதுரை லேடி டொக் கல்லூரியும் யாதவ கல்லூரியும் முன்னேறியது. இதில் மதுரை லேடி டொக் கல்லூரி வெற்றிப் பெற்று முதலிடத்தை பெற்றது. இரண்டாவது இடத்தை யாதவா கல்லூரியும் மூன்றாவது இடத்தை மங்கயற்கரசி கல்லூரியும் நான்காவது இடத்தை வி . வி . வன்னியபெருமாள் கல்லூரியும் பெற்றது . இதில் சிறப்பு அழைப்பாளராக எ .கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரி தாளாளர் எ .கே .டி. கிருஷ்ணமராஜு கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கோப்பைகளை வழங்கினார்.
மதுரை காமராஜ் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் . ராமு கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் முனைவர். ஜமுனா வாழ்த்துரை வழங்கினார்.கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கண்மணி நன்றியுரை கூறினார் .