வலங்கைமானில் மழையின் காரணமாக மரக்கிளை முறிந்து விழுந்து மின்கம்பம் முறிந்தது மின்சாரம் பாதிப்பு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் இன்று மாலை லேசான காற்றுடன் மழை பெய்தது,அது சமயம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ள பகுதியில் உள்ள மரத்தின் கிளை முறிந்து மின்சார கம்பிகளின் மீது விழுந்ததால், மின்கம்பி அறுந்து மின் கம்பமும் முறிந்தது. தகவல் அறிந்த மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேரமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுற்றி உள்ள பகுதிக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. நல்ல வேலையாக மழை பெய்த காரணத்தினால் மக்கள் யாரும் சாலையில் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.