சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை, உடந்தையாக இருந்தவருக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனை
அரியலூர் மாவட்டம் கோப்பிலியங்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்கிற கொளஞ்சி என்பவர் (வயது 30/2018) த/பெ அண்ணாதுரை, கடந்த 2018 ஆண்டு கீழப்பழுவூர் அருகே பெற்றோருடன் வசித்த வந்து 18 வயதுக்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்று பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். சிறுமியை கடத்திச் செல்ல சிறுமியின் உறவினர் பழனிசாமி என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை 24.12.2018 அன்று கீழப்பழுவூர் காவல் நிலையம் ஆஜராகி அளித்த புகார் அடிப்படையில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2018 அப்போதைய கீழப்பழுவூர் வட்ட ஆய்வாளராக இருந்த திரு.சிங்காரவேல் அவர்கள் இவ்வழகை விசாரணை செய்து எதிரி அருள்செல்வன் என்கிற கொளஞ்சி மற்றும் பழனிசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார் மேலும் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள்.
இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை அரியலூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் 04.10.2024 இன்று விசாரணைக்கு வந்தது. இதில் காவல்துறை சார்பில் அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் எதிரி அருள்செல்வன் என்கிற கொளஞ்சி என்ற நபருக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15000 ரூபாய் அபராதம் தண்டனையாக விதித்தது. அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எதிரி பழனிசாமிக்கு 10 ஆண்டுகால சிறை தண்டனை மற்றும் 10000 ரூபாய் அபராதம் விதித்தது. அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் ஒரு ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டது. இதனை அடுத்து குற்றவாளிகள் இருவரும் காவல்துறையினரால் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு பாதிக்கப்பட்டுர் நிவாரண நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்கள்.