மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்து கழக கொடி ஏற்றி வைத்த முன்னாள் எம்எல்ஏ வீ தமிழ்மணி..
திருக்கழுக்குன்றம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தில் திமுக அலுவலக திறப்பு விழா திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் கே கே பூபதி தலைமையில் நடைபெற்றது முன்னாள் எம்எல்ஏவும் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளருமான வீ தமிழ்மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திமுக அலுவலகத்தை திறந்து வைத்து மூன்று பகுதிகளிலும் கழக கொடியினை ஏற்றி வைத்தார் அதனை தொடர்ந்து கடம்பாடி பேருந்து நிலையம் அருகே சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது
அவ்வாறு நடைபெறும் பணிகளில் தரை பாலம் சற்று உயரமாக வேண்டும் என ஊராட்சி மக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் அதனை முன்னாள் எம்எல்ஏ பார்வையிட்டு துறை சார்ந்த அதிகாரியுடன் பேசி தரை பால உயரத்தை உயர்த்தி பணி நடைபெற வழிவகை செய்கிறேன் என உறுதி அளித்து சென்றார் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் குமார் தேன்மொழி, சேட்டு, சந்திரன், ராஜி, கங்காதரன், மகேந்திரன், ஏழுமலை, எஸ் ஏழுமலை, மனோகரன், கௌதமன், வீரராகவன் அசலப்பன், தனுஷ்கோடி சக்தியேந்திரன் தமிழரசன், முருகப்பன், உள்ளிட்ட நிர்வாகிகளுடன் இளைஞரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.