கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கும்பகோணம் அருகே
பாபநாசத்தில் தியான மகா யக்ஞம் -தியான விழிப்புணர்வு நிகழ்ச்சி…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் அகத்தியர் பிரமிட் தியான ஆசிரமம், வேலுநாச்சியார் லயன்ஸ் சங்கம் மற்றும் அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம் சார்பில் தியான மகா யக்ஞம் -தியான விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலு நாச்சியார் லயன்ஸ் சங்கத் தலைவர்
தில்லைநாயகி சம்மந்தம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அகத்தியர் பிரமிட் தியான ஆசிரமம் மூத்த ஆசிரியர் பிரசாந்தி, தியான ஆசிரியர் வேலுமணி,வேலு நாச்சியார் லயன்ஸ் சங்க சாசன தலைவர்
தில்லைநாயகி சம்பந்தம் , செயலாளர் திலகவதி கணேசன், பொருளாளர் கனகலட்சுமி பரணிதரன், நிர்வாகிகள் நர்மதா மணிமாறன் சத்யா சீனிவாசன் ,மகேஸ்வரி முத்தமிழ்செல்வன் ,சாரதா மகளிர் மன்ற தலைவர், கல்பனா பிரவீன், சத்தியா, ரேவதி ,பரிமளா, பசுமை சுற்றுலா நிறுவனர் பரணிதரன் , ஆப்தீன் பள்ளி முதல்வர் செல்வி, ஆசிரியர் தீபா மற்றும் உறுப்பினர்கள் என பலர் தியான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *