பெரம்பலூரில் அஇஅதிமுக சார்பில் செயல்வீரர்கள்,வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம்.
பெரம்பலூரில் தனியார் கூட்டரங்கில் அஇஅதிமுக வின் பெரம்பலூர் ஒன்றியம் சார்பில் தமிழக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன்வழிகாட்டுதலோடு,பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ம.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்,கழக அமைப்பு செயலாளர் எஸ்.செம்மலை சிறப்புரையாற்றினார்.சிரப்புரையில் தமிழக முதல்வர் மக்களை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு கட்டணங்களையும்,விலைவாசிகளையும் உயர்த்தியுள்ளார் எனவும்,தனது கட்சியில் மூத்த அரசியல்வாதிகள் இருக்கும்பட்சத்தில் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்ததும்,செய்த குற்றங்களுக்காக சிறைக்கு சென்று வந்த செந்தில் பாலாஜி க்கு அதே அமைச்சர் பதவி வழங்கியதும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகாசி, மருத ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜாராம்,பூவை செழியன் ,சந்திரகாசன்பெரம்பலூர் நகர செயலாளர் ராஜ பூபதி, வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.செல்வமணி, மற்றும் மாவட்ட, ஒன்றிய ,நகர ,கிளை கழக செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.