கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரனார் நூற்றாண்டு விழா …
அனைத்து கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் தேவேந்திரகுல வேளாளர் நல சங்கம் சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரனார் நூற்றாண்டு விழாவிற்கு விவேகானந்தா தொண்டு நிறுவன செயலாளர் தங்க.கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் சுரேஷ்குமார் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் பாபநாசம் திமுக நகர செயலாளர் கபிலன் பாபநாசம் அதிமுக நகர செயலாளர் கோவி.சின்னையன் பாபநாசம் அமமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரேம்நாத் பைரன் பாபநாசம் அமமுக நகர செயலாளர் குமார் பாபநாசம் தமாக நகர செயலாளர் பக்ருதீன் அலி அகமது பேரூராட்சி துணைத் தலைவர் பூபதிராஜா மட்டையான் திடல் அழகு நாச்சியம்மன் கோவில் நிர்வாகி பானுமதி லோகநாதன் வழக்கறிஞர்கள் கோபு, சதீஷ்கண்ணன், பாலசுப்பிரமணியன் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம், ராஜராஜசோழன், அன்புச்செல்வன், அறிவழகன், மகாராஜன், தேவராஜன், அருண்மொழி, தாமோதரன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள தியாகி இமானுவேலுவின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.