தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சி…
தேனி
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைக்கு சொந்தமான நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள கர்மவீரர் காமராஜர் கலையரங்கில் “கல்லூரி சாலை – 2024 இது கலைகளின் களம்” நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா வரவேற்புரையாற்றினார்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமையுரையாற்றினார்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைக்கு சொந்தமான கல்விநிறுவனங்களில் படிக்கும் 800 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை பல்வேறு நடனங்களின் மூலம் வெளிப்படுத்தினர்.
கல்லூரியின் செயலாளர் காசி பிரபு பேசுகையில் “நீங்கள் வாழ்வின் மிக முக்கியமான திருப்பத்தில் இருக்கிறீர்கள், பிளஸ் 2 என்பது வெறும் கல்வியின் முடிவல்ல, உங்கள் கனவுகளுக்கு புதிய வாயிலாகும்.உற்சாகத்தையும், ஆர்வத்தையும் இழக்காமல், ஒவ்வொரு நாளும் கற்றலில் ஈடுபடுங்கள்.
கற்றல் என்பது வெறும் புத்தக அறிவில் மட்டும் நின்றுவிடக் கூடாது. நீங்கள் கற்றுக்கொள்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவத்தில் மாற்றுங்கள்” என்று பேசினார். நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசு கலந்து கொண்ட மாணவிகளுக்கு பரிசும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உமாகாந்தி நன்றி உரையாற்றினார்.